உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் சஹாரா அல்ல.., Google கூறிய மற்றொரு இடம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா இல்லை என்று கூகுள் அளித்த பதிலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சஹாரா அல்ல
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் என்பது அனைவருக்கும் அறிந்ததே.
ஆனால், கூகுளின் பதிலின் படி சஹாரா பாலைவனம் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே பாலைவனம் என்றால் வறண்ட நிலப்பரப்பாகும்.
அங்கு வருடாந்திர மழைப்பொழிவு 10 அங்குலத்திற்கும் குறைவாகவே இருக்கும். அதாவது, மணல் திட்டுகள், குறைவான தாவரங்கள் ஆகியவை அடிப்படையில் பாலைவனம் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பணியால் மூடப்பட்டிருக்கும் ஒரு பகுதியை மிகப்பெரிய பாலைவனம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
அதாவது கூகுளின் கருத்துப்படி உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் அண்டார்டிகா என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கூகுள் பயனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கூகுள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் "பாலைவனம் என்பது ஒரு வருடத்திற்கு 10 அங்குலங்களுக்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் நிலப்பரப்பாகும்.
இது தீவிர வறட்சியின் காரணமாக அரிதான தாவரங்களைக் கொண்ட வறண்ட சுற்றுச்சூழல் அமைப்பாக உருவாக்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல தேடுபொறி (search engine) தரப்பில், “அண்டார்டிகா ஆண்டுக்கு சராசரியாக 6.5 அங்குல மழைப்பொழிவைப் பெறுகிறது. இதன் உட்புறம் வறண்டு காணப்படுகிறது.
ஆண்டுக்கு 2 அங்குலங்களுக்கும் குறைவாகவும், கடலோரப் பகுதிகள் 8 அங்குலங்களுக்கும் அதிகமாகவும் மழைப்பொழிவைப் பெறுகின்றன. அண்டார்டிகா கண்டம் ஒரு துருவ பாலைவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது மணல் திட்டுகளுக்கு பதிலாக பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். இது சஹாரா பாலைவனத்தை விட பூமியின் வறண்ட இடங்களில் ஒன்றாகும்.
அதன் McMurdo உலர் பள்ளத்தாக்குகள் கிரகத்தின் வறண்ட மற்றும் காற்றோட்டமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
பூமியின் மொத்த நிலப்பரப்பில் 9.4 சதவீதத்தை அண்டார்டிகா கொண்டுள்ளது. இது சஹாரா நிலப்பரப்பின் 8 சதவீதத்தை உள்ளடக்கியது. மேலும்,அவுஸ்திரேலியாவை விட இரண்டு மடங்கு பெரியது.
அதன் மக்கள்தொகை பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். அதாவது கோடை காலத்தில் சுமார் 5,000 பேர் முதல் குளிர்காலத்தில் 1,000 பேர் வரை மாறுபடும்.
பூமியின் காலநிலை மற்றும் கடல் அமைப்புகளில் அதன் ஆழமான தாக்கத்தின் காரணமாக, இது அறிவியலில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |