எலோன் மஸ்க்கை தடாலடியாகப் பின்னுக்குத் தள்ளி... உலகின் பெரும் கோடீஸ்வரரான நபர்
கடந்த 2021 முதல் உலகின் பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்கவைத்து வந்த டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கை ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
காலாண்டு வருவாய்
லாரி எலிசனின் தற்போதைய சொத்து மதிப்பு 393 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. எலோன் மஸ்க்கின் 385 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை தடாலடியாக லாரி எலிசன் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஆரக்கிள் நிறுவனம் எதிர்பார்ப்புகளை விஞ்சும் காலாண்டு வருவாய் முடிவுகளை வெளியிட்டதை அடுத்து, புதன்கிழமை எலிசனின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது.
மேலும் எலிசனின் 101 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு உயர்வு என்பது, ப்ளூம்பெர்க்கால் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பாகும். திருமணமாகாத 19 வயது யூத பெண் ஒருவருக்கு 1944ல் நியூயார்க் நகரில் பிறந்தவர் லாரி எலிசன்.
பிறந்து 9 மாதங்களில் அவருக்கு நிமோனியா பிடிபட, தனது அத்தை மற்றும் மாமாவிடம் மகனை தத்தெடுப்புக்காக அளிக்கப்பட்டார். லாரியின் வளர்ப்பு பெற்றோர் அவரை சிகாகோவில் வளர்த்தனர், ஆனால் அவர் 12 வயதில் மட்டுமே தத்தெடுக்கப்பட்டதை அறிந்தார்.
அந்த உண்மை அவரது உலகப்பார்வையை மாற்றியது. 1977ல் லாரி எலிசன் தரவுத்தள மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளை இணைந்து நிறுவினார், 80 வயதான இவர் தற்போது ஆரக்கிள் கார்ப்பரேஷனில் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்,
மஸ்க்கின் நெருங்கிய நண்பர்
மேலும் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். ஆரக்கிளின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வு காரணமாக லாரி எலிசனின் சொத்து மதிப்பும் அதிவேகமாக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில், எலிசனின் சொத்து மதிப்பு இரண்டு நாட்களில் 41 பில்லியன் டொலர்கள் அதிகரித்தது, இதில் ஒரே நாளில் 25 பில்லியன் டொலர்கள் அதிகரித்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லாரி எலிசன் எலோன் மஸ்க்கின் நெருங்கிய நண்பர், மேலும் டெஸ்லாவில் ஒரு பெரிய முதலீட்டாளர். மட்டுமின்றி, டிசம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2022 வரை டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |