'பிண நீரை' விற்று பணம் சம்பாதிக்கும் பெண்! அதிசயமாக ஒன்லைனில் வாங்கும் மக்கள்
அமெரிக்காவில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட ஏரிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்று அழுக்கான போத்தல் நீரை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில், லாஸ் வேகாஸின் மீட் (Mead) ஏரியின் கரையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு கடைக்காரர் அப்பகுதியால் உருவாக்கப்பட்ட புதிய ஆர்வத்திலிருந்து லாபம் ஈட்ட ஒரு தனித்துவமான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.
லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் மாலுக்கு நடுவில், மந்திரம், மாந்திரீகம் மற்றும் பிற இருண்ட தலைப்புகள் தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் பிளாஸ்பீம் பூட்டிக் (Blaspheme Boutique) எனும் சிறிய கடையின் உரிமையாளர் தான் சார்லி ஹாங்க்ஸ்.
ஹாங்க்ஸ், Mead ஏரிக்கரை பகுதியில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு மக்களுக்கு எழுந்துள்ள புதிய ஆர்வத்திலிருந்து லாபம் ஈட்ட ஒரு புத்திசாலித்தனமான யோசனையைக் கொண்டு வந்தார். அவர் சிறிய போத்தல்களில் "லேக் மீட் கார்ப்ஸ் வாட்டர்" (Lake Mead Corpse Water) என்ற பெயரில் விற்கிறாள்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஹாங்க்ஸ், இது நகைச்சுவையாக தொடங்கியது என்று விளக்கினார். பாரம்பரியமாக பிண நீர் மாந்திரீக நடைமுறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தான் விற்பது உண்மையில் பிண நீர் அல்ல என்றும் அவர் கூறினார்.
இது உண்மையில் ஏரியிலிருந்து வரும் நீர் அல்ல, இது Witch-hazel எனும் தாவரம், கண்ணாடி பாறைகள், அழுக்கு மற்றும் பச்சை மைக்கா ஆகியவற்றின் கலவை என்னு அவர் கூறினார்.
ஏற்கனவே ஏரியின் நீர் குறைந்து வரும் நிலையில், அங்கிருந்து தண்ணீரை திருட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
ஹாங்க்ஸும் அவரது கணவரும் "பிண நீரை" ஒரு பாட்டில் 7.77 அமெரிக்க டொலருக்கு விற்கிறார்கள். இதுவரை, இந்த ஜோடி ஓன்லைனில் 75 பாட்டில்களையும், கடையில் 50 பாட்டில்களையும் விற்றுள்ளது.
மாஃபியாவால் பாதிக்கப்பட்டவர்களின் மரணத்தை இந்த ஜோடி பயன்படுத்திக் கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்டு.