கடைசி பந்தில் ட்விஸ்ட்! வெளியேறிய வீரர்களை மீண்டும் அழைத்த நடுவர்... குழப்பத்தை ஏற்படுத்திய வீடியோ
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் முதல் இன்னிங்சின் கடைசி பந்தில் பந்தில் ரன் அவுட் ஆன பிறகு மைதானத்தை விட்டு வெளியேறிய போது அது நோ பால் ஆனதால் குழப்பம் ஏற்பட்டது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி விளையாடிய நிலையில் கடைசி பந்தை ரொமாரியோ ஷெப்பார்ட் எதிர்கொண்டார். அவருக்கு நாதன் எலிஸ் பந்துவீச பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது. இதையடுத்து ஒரு ரன் எடுக்க ரொமாரியோ ஓட எதிர்முனையில் இருந்த அவர் பார்ட்னர் புவனேஷ்வர் குமாரும் ஓடி வந்தார்.
அப்போது பஞ்சாப் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஸ்ட்ம்பில் பந்தை போட்டு குமாரை ரன் அவுட் ஆக்கினார். இதையடுத்து இரண்டு அணி வீரர்களும் ஓய்வறைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
— Cred Bounty (@credbounty) May 22, 2022
அப்போது திடீர் ட்விஸ்டாக அது நோ பால் என தெரிந்தது. இதையடுத்து நடுவர் அனைவரையும் மீண்டும் மைதானத்திற்கு அழைத்தார். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது, அதன் உச்சமாக ஹைதராபாத்தின் அடுத்த பேட்டர் உம்ரான் மாலிக் பேட்டிங் செய்ய தயாராகாமல் இருந்தார்.
ஏனெனில் அவர் பந்துவீசுவதற்கு தயாராகி கொண்டிருந்தார். பின்னர் ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு, மாலிக் கடைசிப் பந்து வீச்சை எதிர்கொள்ள துடுப்பெடுத்தாடினார்.
அவரால் அதை சரியாக அடிக்க முடியாமல் போக ஒரு ரன் எடுக்க ஓடினார். ஆனால் அவரை ரன் அவுட் செய்ய பஞ்சாப் வீரர்கள் முயன்றும் கடைசியில் கோட்டை விட்டனர்.