வருமான வரி செலுத்த தவறினால் எவ்வளவு அபராதம் அறவிடப்படும் ? - முழு விவரம் இதோ
வருமான வரியை குறித்த திகதியில் செலுத்தவில்லை என்றால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இறுதி திகதிகள்
குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியை தவறாமல் செலுத்த வேண்டும்.
வருமான வரி செலுத்தி முடிப்பதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதன்படி செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் பெறும் நபர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் ஜூலை 31 2024 இற்குள் செலுத்த வேண்டும்.
தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளை அக்டோபர் 31ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரிவு 92இ கீழ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் நவம்பர் 30ஆம் திகதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
அனைத்து வரி செலுத்துவோருக்கும் தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆகும்.
எவ்வளவு அபராதம் அறவிடப்படும்?
குறிப்பிட்டுள்ள திகதிக்குள் வரியை செலுத்தவில்லை என்றால் உங்களுக்கான அபராதம் விதிக்கப்படும்.
வரி செலுத்துவோர் கட்டணம் அல்லது அபராதம் செலுத்துவதைத் தவிர, மற்ற வரிச் சலுகைகளையும் இழக்கின்றனர்.
நிலுவைத் தேதிக்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்யலாம் என்றாலும், அபராதம் செலுத்த வேண்டும்.
தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
234ஏ பிரிவின் கீழ் அபராதத்திற்கும் வட்டி விதிக்கப்படலாம். தாமதத்திற்கான வரி மீதும் அபராதம் விதிக்கப்படலாம். 234ஏ பிரிவின் கீழ் அபராத வட்டி மாதத்திற்கு ஒரு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |