கடைசி பனிக் காலத்தின் பொக்கிஷம்: திபெத்தில் 1,28,000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறை கண்டுபிடிப்பு
தீபத்தில் 128000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
128000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறை
கடைசி பனிக்காலத்தை சேர்ந்த 128000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறையை திபெத்திய பீடபூமியின் மலை பனிப்பாறை ஒன்றின் ஆழத்தில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துருவப் பகுதிகளுக்கு வெளியே பூமியின் பழமையான பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது வியக்கத்தக்க கண்டுபிடிப்பு என்றும், பருவநிலை வரலாற்றை அறிந்து கொள்ள கிடைத்து இருக்கும் அறிய வாய்ப்பு என்றும் SciTech Daily செய்தி வெளியிட்டுள்ளது.
ஆண்டீஸ்(Andes) மலைத் தொடரின் பனிக்கோர் மாதிரிகள் சுமார் 30000 ஆண்டுகள் மட்டுமே பின்னோக்கி செல்கிறது.

ஆனால் குலியா(Guliya) பனி முகடு மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நீடித்த மற்றும் பழமையான பனிப்பாறை பருவநிலை காப்பகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
குலியாவின் பனிப்பாறைகளின் வயது குறித்து விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எப்படி பார்த்தாலும் இந்த பனிப்பாறைகள் 12,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்காது என்று கணிப்புகள் கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்திய இந்த ஆராய்ச்சி முடிவுகளில், இவை ஹோலோசீன்(Holocene) காலத்திற்கு முந்தியவை என்றும், கடைசி பனிக்காலத்தை சேர்ந்தது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.