ஊரில் வாழ்ந்த கடைசி மனிதரும் மரணம்.., தூத்துக்குடியில் நடந்த துயரம்
தூத்துக்குடியில் உள்ள கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான முதியவரும் உயிரிழந்ததால் அடக்கம் செய்வதற்கு மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
கடைசி மனிதர்
தமிழக மாவட்டமான தூத்துக்குடி, செக்காரக்குடி பஞ்சாயத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமானது, நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
2011 -ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269 ஆகும்.
இந்த கிராமத்தில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்கள் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.
இதனால், ஊர்மக்கள் ஒவ்வொருவராக தங்களுடைய விவசாய நிலத்தை எல்லாம் போட்டுவிட்டு வேறு ஊருக்கு சென்றனர்.
ஆனால், கந்தசாமி (75) என்பவர் மட்டும் அங்கேயே வசித்து வந்தார். இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் திரும்ப வரவேண்டும் என்றும், ஊர் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதும் தான் கந்தசாமியின் ஆசையாக இருந்தது.
ஆனால், கடந்த 26 -ம் திகதி கந்தசாமி உயிரிழந்தார். பின்னர், இவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மட்டுமன்றி, ஊரில் வாழ்ந்தவர்களும் திரும்பி வந்தனர்.
கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரும் தற்போது உயிரிழந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மீனாட்சிபுரம் மாறி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |