இறுதி நிமிடத்தில் உயிர் பிழைக்க முயன்ற ரஷ்ய வீரர்: குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சி
உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவத்தின் டாங்கிகளை சுட்டு விழ்த்தும்போது இறுதிநேரத்தில் உயிர் தப்பிக்க முயற்சித்த ரஷ்ய ராணுவ வீரரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா நான்காவது வாரமாக ராணுவ தாக்குதலை நடத்தி முன்னகர்ந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் ஆயுத படையும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அந்தவகையில், உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவந்த ரஷ்ய ராணுவத்தின் டாங்கிகளை குறிவைத்து உக்ரைன் ஆயுதப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
Last seconds of this #Russian invader in #Ukraine.#StandWithUkraine️ #UkraineUnderAttack #RussiaInvadedUkraine #RussianArmy #PutinIsaWarCriminal #StopPutin #RussianUkrainianWar #RussiaGoHome #нетвойне #россиясмотри #PutinsSponsors #Russia #Putin pic.twitter.com/2JCUAS3pDs
— olexander scherba?? (@olex_scherba) March 19, 2022
உக்ரைன் ராணுவம் நடத்திய இத்தகையதொரு தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் டாங்கி படைப்பிரிவின் வீரர் ஒருவர் இறுதி தருணத்தில் தப்பிக்க முயற்சித்தது உயிரிழந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவுஸ்திரேலியாவின் உக்ரைனின் தூதர் ஒலெக்சாண்டர் ஷெர்பா வெளியீட்டு உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பாளரின் இறுதி நிமிடங்கள் என இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
The operational command "Pivden" clearly showed how the occupiers are being destroyed
— NEXTA (@nexta_tv) March 18, 2022
The media report that the video shows the positions of the #Russian troops at the #Kherson airbase. They were destroyed by #Ukrainian artillery supported by Bayraktar TB2. It was March 15th. pic.twitter.com/lx4wNTdT18
இதைப்போலவே உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்களின் துருப்புகளை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணை மூலம் அழித்தொழிப்பது தொடரான வீடியோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.