போருக்கு தயாராகிறதா சீனா... இந்திய எல்லையில் 36 விமானம் நிறுத்துமிடங்கள் அமைப்பு
இந்தியாவிற்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில், எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் 36 போர் விமானங்களுக்கான நிறுத்துமிடங்களை சீனா அமைத்துள்ளதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்கள் நிறுத்துமிடம்
McMahon கோடு என அறியப்படும் அருணாச்சலப் பிரதேசப் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை அருகிலேயே கட்டுமானங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது.

திபத்தில் அமைந்துள்ள சீனாவின் Lhunze விமானப்படை தளத்திலேயே விமானங்கள் நிறுத்துமிடம், புதிய நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஒரு புதிய ஏப்ரன் உள்ளிட்டவையும் அமைத்துள்ளனர்.
Lhunze விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இந்த விமானம் நிறுத்துமிடங்கள் அனைத்தும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் Tawang நகரில் இருந்து 107 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் அமைப்புகளை முன்னோக்கி நிலைநிறுத்துவதற்கான மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
மட்டுமின்றி அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் முழுவதும் உள்ள இந்தியாவின் விமான தளங்களிலிருந்து எந்தவொரு வான்வழி அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க இந்திய விமானப்படைக்குத் தேவையான பதிலளிப்பு நேரத்தைக் குறைக்கிறது.
போருக்கு தயாராகிறார்கள்
36 போர் விமானங்களை நிறுத்துவதற்கு இடம் அமைத்துள்ள சீனா, எதிர்காலத்தில் இந்தியாவுடன் ஏதேனும் ஒரு நெருக்கடி ஏற்பட்டால், இந்தியா முடிவெடுக்கும் முன்னர் துரிதமாக தாக்குதல் நடத்தவும் உதவியாக இருக்கும் என ஓய்வு பெற்ற ஏர் சீஃப் மார்ஷல் பிஎஸ் தனோவா தெரிவித்துள்ளார்.

தேவையாக எரிபொருளும் ஆயுதங்கலும் ஏற்கனவே அவர்கள் நிலத்தடி சுரங்கத்தில் சேமித்துள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திபத்தில் அவர்கள் விமானம் நிறுத்துமிடங்கள் அமைத்தார்கள் என்றால், அவர்கள் இந்தியாவுடன் போருக்கு தயாராகிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பிஎஸ் தனோவா தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கிறார் முன்னாள் ஏர் மார்ஷல் அனில் கோஸ்லா.
முக்கியமாக 2020 கல்வான் மோதல்களுக்குப் பிறகு சமீபத்திய புவிசார் அரசியல் பதட்டங்கள், வளர்ந்து வரும் சீன இராணுவத் திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பு முறைகள் ஆகியவற்றின் பின்னணியில் பகுப்பாய்வு செய்யப்படும்போது இது உறுதியாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |