தடைகள் செல்லாது, சட்டத்திற்கு புறம்பானது: பிரித்தானியாவுக்கு எதிராக சீறிய ரஷ்யா
உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான பிரித்தானியாவின் புதிய பொருளாதார தடைகள் சட்டவிரோதமானது என்று லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
எந்த தொடர்பும் இல்லை
பிரித்தானியா புதிதாக தடை விதிக்கப்பட்டவர்களில் பலருக்கு போருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனில் போரின் ஆரம்ப நாட்களில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான மிகப்பெரிய பொருளாதாரத் தடைகள் இதுவென்று பிரித்தானியா திங்களன்று அறிவித்தது.
ரஷ்ய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் வழங்கும் உலகளாவிய நிறுவனங்களுக்கும் தொடர்புடைய தடைகள் பொருந்தும் என்றும் பிரித்தானியா அறிவித்தது.
இதுவே தற்போது ரஷ்யாவை பதிலளிக்க வைத்துள்ளது. மேலும், ரஷ்ய தூதரகம் செவ்வாயன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த நடவடிக்கைகள் வீண்வேலை என்றும் கூறியது.
முக்கியமான கட்டத்தில்
மட்டுமின்றி, தடைகள் விதிக்க பிரித்தானியா தெரிவு செய்த தருணம் மிகவும் கவனிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள ரஷ்ய தூதரகம், ரஷ்யா-அமெரிக்க உடன்படிக்கைகளுக்கு ஏற்ப எதிர்கால உக்ரைன் தொடர்பில் தீர்வு எட்டவிருக்கும் மிக முக்கியமான கட்டத்தில் பிரித்தானியா இந்த முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |