பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லாட்வியா: குடிமக்களுக்கு தாயகம் திரும்ப அறிவுறுத்தல்
பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது.
எல்லையை மூடிய லாட்வியா
தொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் உடனடியாக மூடப்படுவதாக லாட்வியா நாட்டு உள்துறை அமைச்சர் ஜானிஸ் டோம்பிராவா(Janis Dombrava) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக டோம்பிராவா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ள லாட்வியா குடிமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப்பாதையை பயன்படுத்தி தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பெலாரஸ் நாட்டுடனான எல்லை மூடல் நடவடிக்கையானது, இந்த வார தொடக்கத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து வெளிவந்துள்ளது.

X தளத்தில் டோம்பிராவா வெளியிட்ட பதிவில், பெலாரஸ் நாட்டிற்கு செல்லும் அனைத்து பயண திட்டங்களையும் உடனடியாக கைவிடுமாறு லாட்வியா குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள அகதிகள் கலப்பினப் போர் தீவிரமடைந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு போக்குவரத்து எப்போது வேண்டுமாலும் தடைபடலாம் என்று அவர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |