6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
Lava Bold N4 Pro அறிமுகம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனத்தின் Bold N4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகி கவனம் பெற்று வருகிறது.
பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்திய சந்தைகளில் விற்பனையை தொடங்குகிறது.

Lava Bold N4 Pro சிறப்பம்சங்கள்
Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் சிறப்பான மற்றும் துடிப்பான 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி திரையை கொண்டுள்ளது.
Unisoc T8200 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கொண்டுள்ளது.
6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனில் 6,000mAh பற்றரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க பிரதான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனின் விலையானது இந்திய சந்தையில் ரூ.13,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.