ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மாயம்: பதவியைப் பறித்தாரா புடின்?
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதிலிருந்தே ரஷ்ய தொலைக்காட்சிகளில் அதிகம் தோன்றி மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சரைக் காணாததால் கிரெம்ளினில் பதற்றம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மாயம்

கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் முக்கிய நபர்கள் மாயமாகிவருகிறார்கள். சிலர் ஜன்னலிலிருந்து குதித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள், சிலர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
சிலரது உடல்கள் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சரான Roman Starovoit தன் காரின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov மாயமாகியுள்ளார்.
புதன்கிழமை நடந்த அணு ஆயுத சோதனை தொடர்பான கூட்டத்தில் Sergey Lavrov பங்கேற்கவில்லை.
அத்துடன், தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் G20 மாநாட்டுக்கான ரஷ்ய பிரதிநிதிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் Sergey Lavrov.
ஆக, ரஷ்யாவில் முக்கிய நபர்கள் மாயமாகிவரும் நிலையில், Sergey Lavrovக்கும் அதே கதி ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடயம் என்னவென்றால், உக்ரைன் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் புதாபெஸ்டில் சந்தித்துப் பேச இருந்தார்கள்.

அவர்கள் சந்தித்துப் பேச முடிவெடுத்த அடுத்த நாள் Sergey Lavrovயும் அமெரிக்க மாகாணங்கள் செயலரான Marco Rubioவும் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ரத்தானது.
அந்த விடயத்தை Sergey Lavrov சரியாக கையாளவில்லை என்றும் அதனாலேயே பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் புடின் கருதுவதாகவும், அதனால் அவர் Sergey Lavrov மீது கோபமடைந்துளதாகவும், அதுதான் Sergey Lavrov மாயமானதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆனால், புடினுக்கும் Sergey Lavrovக்கும் கருத்துவேறுபாடு என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |