மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்: பேசிய முதல் வார்த்தைகள்
Lawyer shares first things Pike said when she woke up: மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண் பேசிய முதல் வார்த்தைகள் குறித்து அவரது சட்டத்தரணி தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காமல் பிழைத்துக்கொண்ட விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அவர் முதன்முறையாக பேசிய விடயங்களை அவரது சட்டத்தரணி பகிர்ந்துகொண்டுள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள Nashville என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) என்னும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிறிஸ்டாவுக்கு இதயத்துடிப்பு இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பேசிய முதல் வார்த்தைகள்
இந்நிலையில், கிறிஸ்டாவுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
கண் விழித்த கிறிஸ்டா, ’நான் எங்கே இருக்கிறேன், நீங்கள் யார்’ என்று தனது சட்டத்தரணியான Randy Spivey என்பவரிடம் கேட்டுள்ளார்.

தனக்கு என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள கிறிஸ்டா விரும்புவதாகவும், தன் சட்டத்தரணிகள் மற்றும் தன்னால் கொல்லப்பட்ட கொலீனுடைய குடும்பத்தினர் குறித்து அவர் விசாரித்ததாகவும் Spivey தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிறிஸ்டா கோபமாகவும், குழப்பத்திலும் இருப்பதாக தான் கருதுவதாகவும் Spivey தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அரசு தன்னைக் கொல்ல முயன்ற விடயம் குறித்து அவருக்கு நன்கு தெரிகிறது என்றும், தனக்கு ஊசி போடப்பட்டபோது தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவருக்கு நினைவிருப்பதாகவும் Spivey தெரிவித்துள்ளார்.