கனடா வேலையை உதறிவிட்டு... தினை விற்று ஆண்டுக்கு பல கோடிகள் சம்பாதிக்கும் சட்டத்தரணி
மராட்டிய மாகாணத்தை சேர்ந்த ஷர்மிளா ஜெயின் ஓஸ்வால் தமது கிராம மக்களுக்கு உதவும் பொருட்டு துவங்கிய நிறுவனத்தால், தற்போது பல கோடிகள் வருமானம் ஈட்டி வருகிறார்.
வேளாண் மக்கள் படும் துயரம்
கனடாவில் ஆண்டுக்கு லட்சங்கள் சம்பளத்தில் பணியாற்றி வந்த ஷர்மிளா ஜெயின் ஓஸ்வால், தமது மாராட்டிய மாகாணத்தில் வேளாண் மக்கள் படும் துயரமும் தற்கொலை எண்ணிக்கையும் நாடு திரும்ப உந்துதலாக அமைந்தது.
2008ல் இந்தியா திரும்பிய ஷர்மிளா, சுமார் 2 ஆண்டுகள் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டியத்தில் வேளாண் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை ஆய்வு செய்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக Green Energy Foundation என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினார். வேளாண் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு உதவும் பொருட்டு, இந்த நிறுவனம் செயல்படத் துவங்கியது.
இங்கிலாந்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான ஷர்மிளா 1997 முதல் 1999 வரையில் இங்கிலாந்திலும், 2007 வரையில் கனடாவிலும் பணியாற்றியுள்ளார்.
தினை மற்றும் காய்கறி விவசாயம்
2008ல் தமது தொண்டு நிறுவனம் சார்பாக குஜராத், ராஜஸ்தான் மற்றும் மாராட்டிய மாகாணங்களில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்து, புதுமைகளை புகுத்தி பல வகை பயிர்களை சாகுபடி சேயும் திட்டத்தை செயல்படுத்தினார்.
கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சம் வேளாண் மக்களுக்கு ஷர்மிளா உதவியுள்ளார். இவர்கள் தினை மற்றும் காய்கறி விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த முயற்சி அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, Gud Mom என்ற இவர்களின் நிறுவனத்தில் தற்போது 5,000 தினை விவசாயிகள் இணைந்துள்ளனர். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 16 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |