கனடாவை இந்திய மாணவர்கள் புறக்கணித்ததால் கனடாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனடாவை புறக்கணித்த இந்திய மாணவர்கள்
கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்.
இந்திய மாணவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லியே கனேடிய அரசியல்வாதிகள் கனடாவில் வீடு பற்றாக்குறை போன்ற விடயங்களுக்கு அவர்கள் மீது பழி போட்டதும் உண்டு.
ஆனால், ஒரு அளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய மாணவர்கள் பலர் கனடாவை புறக்கணிக்கத் துவங்கிவிட்டார்கள்.
சர்வதேச மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்த கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட கல்வி அனுமதிகளைவிட 35 சதவிகிதம் குறைத்து, 364,000 கல்வி அனுமதிகளை மட்டுமே வழங்க முடிவு செய்திருந்தது.
ஆனால், மாணவர்கள் கனடாவைப் புறக்கணிக்க முடிவு செய்ததால், முந்தைய ஆண்டைவிட கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்த சர்வதேச மாணவர்கள் என்ணிக்கை 48 சதவிகிதம் குறிந்துவிட்டது.
அதாவது, 364,000 கல்வி அனுமதிகளை மட்டுமே வழங்க கனடா திட்டமிட்டிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட 100,000 பேர் குறைவாக கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
ஆம், 267,890 பேர் மட்டுமே கனடாவில் கல்வி கற்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது என்ன பெரிய வித்தியாசமா என்றால், ஆம், அது பெரிய வித்தியாசம்தாம்.
ஏனென்றால், இவ்வளவு மாணவர்கள் கனடாவை புறக்கணித்ததால், கனடாவில் சுமார் 10,000 பேர் கல்வித்துறையில் வேலை இழந்துள்ளார்கள்.
பல கல்லூரிகள் இயங்க இயலாமல், பல பாடப்பிரிவுகளுக்கு போதுமான மாணவர்கள் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
சர்வதேச மாணவர்கள் வழங்கும் கல்விக்கட்டணம் இல்லாததால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சமாளிக்க உதவுமாறு The Ontario Public Service Employees Union (OPSEU) என்னும் அமைப்பு அரசாங்கங்களுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதிலிருந்து, சர்வதேச மாணவர்களின் இழப்பு கனடாவில் கல்வித்துறை மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |