பொதுத்தேர்தலில் பின்னடைவு... உள்ளாட்சித் தேர்தலில் முன்னிலை: ஜேர்மன் தலைவருக்கு மீண்டும் ஆதரவு?
ஜேர்மன் பொதுத்தேர்தலில் பல இருக்கைகளை இழந்த ஆளும் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது.
இதனால், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் ஆதரவு பெருகிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் முன்னிலை
ஜேர்மனியின் ஹாம்பர்க் மாகாண தேர்தலில், ஆளும் ஓலாஃப் ஷோல்ஸின் Social Democrats (SPD) கட்சிக்கு 33.5 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
நேற்று ஞாயிற்றுகிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது SPD கட்சி.
அடுத்த சேன்ஸராக பதவியேற்க இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸின் CDU கட்சிக்கு 20 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துள்ளன.
ஆக, ஓலாஃப் கட்சிக்கு மீண்டும் ஆதரவு பெருகிறதா என்றால், விடயம் என்னவென்றால், ஹாம்பர்க் மாகாணம், பாரம்பரியமாக SPD கட்சியின் கோட்டை.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஹாம்பர்கில் SPD கட்சியும் கிரீன்ஸ் கட்சியும் இணைந்துதான் ஆட்சி அமைத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |