உக்ரைனில் சங்கமித்த ஐரோப்பிய தலைவர்கள்: போர் படுகொலைகள் குறித்து நேரில் ஆய்வு
பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உக்ரைனின் போர் நிலவரங்கள் குறித்து பார்வையிடுவதற்காக தலைநகர் கீவ்விற்கு இன்று வருகை தந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா போர் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பல்வேறு உலக நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் சீர்குலைந்து நிற்கும் உக்ரைனிய நகரங்களை பார்வையிடுவதற்காக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வருகை தந்துள்ளனர்.
?? At the train station in Kyiv, French President Emmanuel Macron said that he had brought a message of unity and support to Ukrainians. https://t.co/7nN9jmaYNr pic.twitter.com/B8nPyCgTTt
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 16, 2022
ரயில் வண்டி மூலமாக உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் ரஷ்யாவின் போர் அத்துமீறல்கள் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு பிறகு, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயுள்ளனர்.
அந்தவகையில், ரஷ்ய படையினரால் போர் அத்துமீறல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்ட இர்பன் நகரை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைனில் ரஷ்யா போர் குற்றம் மற்றும் படுகொலைகளை நடத்தி இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் நிச்சயமாக வெற்றியடைய வேண்டும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போர் நிறுத்ததிற்கு தயாரான ரஷ்யா: உக்ரைனுடன் கூடிய விரைவில் அமைதி பேச்சுவார்த்தை!
மூன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடைய இந்த கூட்டுப் பயணமானது, கடந்த சில மாதங்களாக ஆயுதங்கள் வழங்குதலை மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் குறைத்து கொண்டதை உக்ரைன் கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.