தொலைபேசியில் புடினை வெளுத்துவாங்கிய மேக்ரான்... வேகவேகமாக இணைப்பைத் துண்டித்த புடின்...
தொலைபேசியில் ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளுத்துவாங்க, அவரோ, நான் ஜிம்மில் இருக்கிறேன், அப்புறம் பேசுகிறேன் என்று கூறி வேகவேகமாக தொலைபேசி இணப்பைத் துண்டித்ததைக் குறித்த ஒரு இரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஊடுருவலுக்கு முன், பிப்ரவரி 20ஆம் திகதி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் அழைத்து, அவரது நோக்கம் என்ன, போரைத் தவிர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது குறித்தெல்லாம் கேட்டிருக்கிறார்.
புடினோ, உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதிகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், ஆனால், ஜெலன்ஸ்கியோ பேச்சு வார்த்தைக்கு மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேக்ரான் எரிச்சலடைய, இருவருக்கும் இடையிலான உரையாடலில் சூடு அதிகரித்திருக்கிறது.
கடைசியாக, புடினும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கொள்கை அடிப்படையில் சந்திக்க இருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அளிக்கவேண்டும் என்று மேக்ரான் கூற, உடனே புடின், நான் இப்போது ஜிம்மில் இருக்கிறேன், உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும், அப்புறம் பேசலாம் என்று கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.
மறூநாள், கிழக்கு உக்ரைனிலிருக்கும் Donetsk மற்றும் Luhansk ஆகிய பகுதிகளை குடியரசுகளாக அறிவித்துள்ளது ரஷ்யா.
பிப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைன் மீது போர் தொடுத்துவிட்டார் புடின்!