நாட்டை விட்டு வெளியேறுங்கள்... உக்ரைனில் முக்கிய நாட்டின் தூதரகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளது
கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது
உக்ரைன் நாடு சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில் ரஷ்ய தரப்பு கொடூரமான தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ரஷ்ய துருப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
@reuters
ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறும் அமெரிக்க தூதரகம், எதிர்வரும் நாட்களில் உக்ரைனின் குடிமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் அரசாங்க வசதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பினால், தனிப்பட்ட முறையில் கிடைக்கும் தரைவழிப் போக்குவரத்து வாய்ப்புகளைப் பயன்படுத்தி உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
@Nurphoto
மட்டுமின்றி, பெரும் வெடிச்சத்தம் அல்லது வெடிகுண்டு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டால் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வீடு அல்லது ஏதும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தால் உடனடியாக தரைத்தளத்திற்கு செல்லவும் அமெரிக்க மக்களை அந்த நாட்டின் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
@getty
இருப்பினும், அமெரிக்க தூதரகம் அந்த நாட்டின் மக்கள் மீது வெளியேறும் எச்சரிக்கை விடுக்கப்படுவது இது முதன்முறையல்ல. தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுக்க காரணமாக கூறப்படுவது, உக்ரைனின் 31வது சுதந்திர தினம் நெருங்கி வருவதால் கண்டிப்பாக ரஷ்யா தாக்குதலை உக்கிரப்படுத்தும் என்பதாலையே.
இதனிடையே, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு உக்ரைன் தடை விதித்துள்ளது.
@reuters