4000 பேர் உயிரிழப்பு: நாடொன்றின் அரசு அறிவிப்பு
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான போரில் உயிரிழப்புகள் 4,000-ஐத் தாண்டியது என லெபனான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தர்கள் தீவிரமாக முயன்று வரும் சூழலில், வெள்ளைக்கிழமை அன்று குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா, ஒரே இரவில் 50க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், லெபனான் மீதான சமீபத்திய இஸ்ரேலியத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4,000-ஐத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 12,120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், பல தெற்கு மாவட்டங்களில் பிற உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; அதே நேரத்தில் கிழக்கு பால்பெக் மாவட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |