லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு: திக்குமுக்காடும் ஹிஸ்புல்லாஹ்
லெபனான் நாட்டில் நேற்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதன் தொடர்ச்சியாக கையடக்க ரேடியோ வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
லெபனானை உலுக்கிய வெடிப்பு சம்பவம்
லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் நாட்டின் பல பகுதிகளில் வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் சிறுமி உட்பட 8 பேர் வரை உயிரிழந்ததுடன், 3000 பேர் வரை படுகாயமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலை குற்றம் சாட்டவில்லை என்றாலும், இதனால் தனது உறுப்பினர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் ஒப்புக் கொண்டுள்ளது.
லெபனானை உலுக்கிய அடுத்த வெடிப்பு அலை
ஏற்கனவே பேஜர்கள் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சமயத்தில், இரண்டாம் அலை வெடிப்பு சம்பவமும் அரங்கேறி இருப்பது லெபனான் நாட்டை பெரிதும் உலுக்கியுள்ளது.
முதல் அலையில் பேஜர்கள் வெடித்த நிலையில், இந்த முறை கையடக்க ரேடியோக்கள் வெடிப்பால் நாடு அதிர்ந்துள்ளது.
பல பகுதிகளில் சூரிய ஆற்றல் அமைப்புகள் வெடித்து இருப்பதாகவும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
பெரும்பாலான வெடிப்புகள் நாட்டின் தெற்கு பகுதிகளிலும், தலைநகரின் தெற்கு புறநகர் பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய புதிய வெடிப்பு சம்பவத்தில், லெபனானின் கிழக்கு பெக்கா பகுதியில் 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் தேசிய ஊடகம் வழங்கிய தகவலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |