ரூ.700 கோடி ஃப்ளாட்டிற்கு சொந்தக்காரர்: இந்தியாவின் பணக்கார பெண்.,யார் இந்த லீனா திவாரி?
இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக திகழும் லீனா திவாரி குறித்து இங்கு காண்போம்.
லீனா திவாரி
1961ஆம் ஆண்டு விட்டல் காந்தியால் Revlon உடன் சேர்ந்து தொடங்கப்பட்ட மும்பை மருந்து நிறுவனம் USV பிரைவேட் லிமிடெட். 
இதன் தலைவராக இருப்பவர் லீனா திவாரி. இவர் உலகின் 1063வது பணக்காரராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகப்பட்டமும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்தான் இந்த லீனா திவாரி.
நிகர மதிப்பு
பின்னர் இவர் தமது குடும்பத் தொழிலைப் பொறுப்பேற்க இந்தியா திரும்பினார். தற்போது இவர், 2025ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் 50 பணக்காரப் பெண்களில் ஒருவராகவும் இடம்பிடித்துள்ளார்.
லீனா திவாரியின் நிகர மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, சதுர அடிக்கு ரூ.2.83 லட்சத்திற்கும் அதிகமான விலையில் லீனா திவாரி சொத்து விற்பனையாக ஃபிளாட்களை கொண்டு வந்தார். 
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஃபிளாட்கள்
லீனா திவாரி இதற்காக முத்திரை வரி மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.63.9 கோடிக்கு மேல் செலுத்தினார். எனவே இதன் மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ.703 கோடியாக உயர்ந்தது.
தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மிகவும் தனிப்பட்டதாக வைத்திருப்பதில் பெயர்பெற்ற லீனா, மும்பையில் இந்த ஆண்டு மே மாதம் இரண்டு இரட்டை அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார்.
32வது தளத்தில் இருந்து 35வது தளம் வரை அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 22,572 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. இவையும் மிகவும் விலையுயர்ந்தவை என்று கூறப்படுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |