பிரான்ஸ் அதிவேக ரயில் நெட்வொர்க் சேதப்படுத்திய விவகாரம்: தீவிர இடதுசாரி ஆர்வலர் கைது
பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ரயில்வே பாதைகளை சேதப்படுத்தியது தொடர்பாக தீவிர இடதுசாரி ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
இடதுசாரி ஆர்வலர் கைது
பிரான்சின் அதிவேக ரயில் பாதை நெட்வொர்க் மீதான தொடர் சேதப்படுத்தல் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தீவிர இடதுசாரி ஆர்வலர் ஒருவர் பிரான்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் உள்கட்டமைப்பை சேதப்படுத்திய இந்த தாக்குதல்கள் மூலம் நூற்றுக்கணக்கானோரின் பயணத்தில் பரவலான குறுக்கீடுகள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் Gerald Darmanin, இத்தகைய செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டித்ததோடு, குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்து இருந்தார்.
விசாரணை தீவிரம்
இந்நிலையில் சந்தேக நபரான தீவிர இடதுசாரி ஆர்வலர் ஞாயிற்றுக்கிழமை நார்மண்டியின் Seine-Maritime இல் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் Gerald Darmanin அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள நபர் அரசின் கொள்கைகள் மற்றும் வரும் விளையாட்டு நிகழ்வுக்கு எதிரான பயங்கர குழுவுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |