சமைத்த சாதம் மிஞ்சி விட்டதா? 10 நிமிடத்தில் மென்மையான சப்பாத்தி செய்யலாம்
பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் மென்மையான சப்பாத்தி செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. பெரும்பாலும் இரவு உணவு சப்பாத்தியாக இருக்கிறது.
அந்தவகையில், மிஞ்சிய சாதம் வைத்து பத்தே நிமிடத்தில் மென்மையான சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1 கப்
- கோதுமை மாவு- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான சாதத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் கோதுமை மா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
மா நன்கு அறைந்து கெட்டியாகி வந்ததும் அதில் இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் கோதுமை மா சேர்த்து சப்பாத்தியிற்கு மா பிசைவது போல் எண்ணெய் சேர்த்து நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி பின் சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் தவா வைத்து சூடானதும் தேய்த்த சப்பாத்தியை சுட்டு எடுத்தால் சுவையான சப்பாத்தி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |