ஜேர்மனியின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அரசு மீது வழக்கு தொடர முடிவு
ஜேர்மனியின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அரசு மீது வழக்கு தொடர ஜேர்மன் அரசியல் கட்சி ஒன்று முடிவு செய்துள்ளது.
மெர்ஸ் சேன்சலராக உதவிய கட்சி
தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பிரெட்ரிக் மெர்ஸின் CDU கட்சி, SPD கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
என்றாலும், CDU கட்சியின் தலைவரான மெர்ஸ் ஜேர்மனியின் சேன்ஸலராவதற்கு தெரிந்தெடுக்கப்படுவதற்கான வாக்கெடுப்பின் முதல் சுற்றில் அவர் தோல்வி அடைந்தார்.
ஆகவே, ஜேர்மனியின் Left Party என்னும் கட்சி மெர்ஸுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. அக்கட்சியின் ஆதரவுடன் தான் மெர்ஸ் சேன்ஸலராக முடிந்தது.
பதிலுக்கு என்ன கிடைத்தது?
இப்படி மெர்ஸ் சேன்சலராக Left Party உதவியும், பதிலுக்கு அக்கட்சிக்கு கிடைத்தது ஏமாற்றம்தான்.
ஆம், மெர்ஸ் அரசு புகலிடக்கோரிக்கையாளர்களைக் கடுமையாக கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திவருகிறது.
அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று கூறும் Left Partyயின் இணை தலைவரான Ines Schwerdtner, மெர்ஸின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயார் என்று கூறியுள்ளார்.
வரும் காலங்களில், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன், இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து மெர்ஸ் சேன்சலராக உதவிய தங்களுடனும் அக்கட்சி கலந்து பேசி முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் Ines வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |