சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? 10 நிமிடத்தில் மொறுமொறு போண்டா செய்யலாம்
பண்டிகை காலங்களில் அனைவர் வீடுகளிலும் இடம் பெறும் முக்கியமான உணவு வடை, போண்டா.
அதுவும் டீ குடிக்கும் நேரத்தில் டீயோடு வடை, போண்டா சாப்பிட்டாலே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், மீதமான சாதத்தை வைத்த சுவையான மொறுமொறு போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 2 கப்
- தயிர்- 3 ஸ்பூன்
- அரிசி மா- 1 கப்
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பச்சைமிளகாய்- 2
- கேரட்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பேக்கிங் சோடா- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சாதம் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் அரிசி மா, சீரகம், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து இதில் துருவிய கேரட், நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயில் வைத்து கலந்த மாவை சிறிய சிறிய உருண்டையாக போட்டு பொறித்து எடுத்தால் போண்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |