Idiyappam: மிஞ்சிய சாதத்தில் பூப்போல் இடியாப்பம்: 10 நிமிடத்தில் செய்யலாம்
இடியாப்பம் என்றாலே வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு.
இதனை தேங்காய் பால், ஆட்டுக்கால் பாயா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில், மிஞ்சிய சாதம் வைத்து 10 நிமிடத்தில் பூப்போல் இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1 கப்
- பச்சரிசி அரிசி மா- 1¼ கப்
செய்முறை
முதலில் ஓரு மிக்ஸி ஜாரில் சாதம் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பச்சரிசி மா சேர்த்து நன்கு பிணைந்துக்கொள்ளவும்.
அடுத்து பிணைந்த மாவை இடியாப்பம் பிழியும் உரலில் சேர்த்து பிழிந்து வேகவைத்து எடுத்தால் பூப்போல் இடியாப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |