மார்ச் 31-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை! அரசு அதிரடி அறிவிப்பு
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
PAN என அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் மார்ச் 31-ஆம் திகதிக்குள் இணைக்கப்படவேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் ஏப்ரல் 1 முதல் பான் அட்டை செயல்படாது என்று அறிவித்துள்ளது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272 B-ன் கீழ் ஆவணங்களை இணைக்கத் தவறும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. +
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு ஆவணங்களையும் இணைக்க மத்திய அரசு காலக்கெடுவை பல முறை நீட்டித்து வந்தது.
இந்நிலையில், காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படாவிட்டால், அனைத்து ஆதார் அட்டைகளையும் இந்த மாத இறுதிக்குள் பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் கட்டவேண்டும்.