வெளிநாட்டவர்களுக்கு விசா நிறுத்துவதை அனுமதிக்கும் மசோதா: பிரித்தானிய செயலாளர் கூறிய விடயம்
பிரித்தானியாவில் இருந்து அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடுகடத்த அனுமதிக்கும் சட்ட மாற்றங்களை கன்சர்வேடிவ்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்ட மசோதா
பிரித்தானிய சட்டத்தின்படி 12 மாத சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்படலாம்.
ஆனால், அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடு கடத்த அனுமதிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவர வேண்டும் என கன்சர்வேடிவ்கள் கூறுகின்றனர்.
இதற்கான திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்பின்படி, பிரித்தானியாவில் இருந்து தனிநபர்களை, குற்றவாளிகள் உட்பட அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல மறுக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த அமைச்சர்களை அனுமதிக்கும்.
இதுகுறித்து Shadow Home செயலாளர் கிறிஸ் பில்ப் கூறுகையில், "இந்த கடுமையான புதிய நடவடிக்கைகள், வெளிநாட்டு குற்றவாளிகளை பிரித்தனியாவில் இருந்து நாடு கடத்த கன்சர்வேடிவ்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன. ஒரு வெளிநாட்டு குடிமகன் இங்கே ஒரு குற்றம் செய்தால், நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும் - அது அவ்வளவு எளிது.
முடிவற்ற மேல்முறையீடுகளை மற்றும் முன்னறிவிப்புகளை நாம் அனுமதிக்க முடியாது. பெரும்பாலும் ஆபத்தான குற்றவாளிகளிடம் இருந்து, பிரித்தானிய குடிமக்களைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு கடமை உள்ளது.
எங்கே ஒரு நாடு தமது குடிமக்களை (குற்றவாளிகள் உட்பட) திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ, அந்த அரசு கண்டிப்பாக புதிய விசாக்களை அந்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்றார்.
104,000 வெளிநாட்டினருக்கு தண்டனை
தற்போதைய சட்டத்தின்படி நாடுகடத்தப்படுவதில் சட்ட சவால்கள் உள்ளன. அவை மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் தடுக்கப்படலாம். ஆனால், தற்போதைய எல்லை மசோதாவில் மற்றொரு திருத்தத்தில், நாடுகடத்தல் அல்லது பிற குடியேற்ற முடிவுகளுக்கு எதிராக மனித உரிமைகள் மேல்முறையீடுகளை கொண்டுவர முற்படும் வெளிநாட்டினரை இந்த நடவடிக்கைகள் தடுக்கும்.
அதற்கு பதிலாக, பிரித்தானிய உள்நாட்டு சட்டம் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் பொருந்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
குடியேற்ற கட்டுப்பாட்டு மையத்தின் காவலர் தேசிய கணினியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின்படி, பிரித்தானியாவில் மூன்று ஆண்டுகளில் 104,000 வெளிநாட்டினருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |