40 வயதிலும் நம்பர் 1 வீரர்: ஓய்வை அறிவித்த ஜாம்பவான் டுவைன் பிராவோ!
பிரபல வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த டுவைன் பிராவோ
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருடன் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பிராவோ விளையாடி வரும் நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற பிராவோ கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
டுவைன் பிராவோ தற்போது டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை 578 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 543 ஓவர்கள் பந்துவீசி 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 441 போட்டிகளில் துடுப்பாட்டம் செய்து 6970 ஓட்டங்கள் குவித்து சிறந்த டி20 வீரர் என்று தன்னை நிறுத்திக் கொண்டுள்ளார்.
டுவைன் பிராவோ நெகிழ்ச்சி
தனது ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய டுவைன் பிராவோ, இது சிறந்த பயணமாக இருந்தது.
எனது கரீபியன் மக்கள் முன்பே தனது கடைசி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறேன், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடங்கிய பயணம் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியுடனே நிறைவடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |