கடைசியில் ஒப்புக்கொண்ட ரஷ்யா... நான்கு வாரத்தில் மட்டும் 4,600 பேர்கள்
உக்ரைன் மீதான போரில் இதுவரை 66,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறப்பு எண்ணிக்கை
ரஷ்யாவில் செயல்படும் Mediazona என்ற ஊடகமே தற்போது முதல் முறையாக இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், தங்களுக்கு தெரிந்த ராணுவ வீரர்கள் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ள அந்த நிறுவனம் சர்வதேச செய்தி நிறுவனங்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்த தகவலில், 50,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது. தற்போது ஆகஸ்டு 30ம் திகதி வெளியிட்டுள்ள பட்டியலில், 66471 பெயர்களை குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த 4 வாரங்களில் மட்டும் 4,600 பேர்கள் மரணமடைந்துள்ளதாக Mediazona குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இறந்த பல வீரர்களின் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றே கூறியுள்ளது.
700,0000 ரஷ்ய வீரர்கள்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட Bashkortostan பகுதியில் அதிக இறப்பு பதிவாகியுள்ளது. இங்கு 2,578 பேர்கள் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 12,000 பேர்கள் சிறை கைதிகள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜூன் மாதம் தெரிவிக்கையில், உக்ரைனில் ஏறக்குறைய 700,0000 ரஷ்ய வீரர்கள் போரிடுவதாக கூறியிருந்தார். ஆனால் இழப்பு குறித்து ரஷ்ய நிர்வாகம் இதுவரை தகவல் வெளியிட்டதில்லை.
கடைசியாக 2022 செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள தரவுகளில் 5937 வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இதனிடையே, போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிப்ரவரியில் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |