ஒரே நாளில் சளி, இருமலை விரட்டி அடிக்க எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு பொருள் போதும்
பருவம் மாறும்போது சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் வரக்கூடும்.
இதனை சரி செய்ய மாத்திரை மருந்து சாப்பிடுவதற்கு பதிலாக மூலிகை மருந்துகள் உடனடியாக நிவாரணம் தருகின்றன.
இந்நிலையில் சளி, இருமலை விரட்டி அடிக்க எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
செய்முறை
- 200ml தண்ணீரில் சிறிய துண்டு இஞ்சியை கொதிக்கவிடுங்கள்.
- அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
- பின் சில துளி எலுமிச்சை சாறை சேர்த்து பருகலாம்.
கிடைக்கும் பயன்கள்
தொண்டை வலி இருக்கும் போது எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடிப்பதால், இவை இரண்டிலும் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நமக்கு தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
தேனில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதோடு சுவாசம் சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை சளியை உடைத்து தொற்றுகளை கட்டுப்படுத்துகிறது.
இந்த சாறுடன் சிறிதளவு மிளகு தூளையும் சேர்த்துக் கொண்டால் புண், வலி, வீக்கம் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இந்த சாறை பருகுவதால் தொண்டையில் உள்ள வறட்சி மற்றும் எரிச்சலை போக்கி ஈரப்பதமாக்குகிறது.
எலுமிச்சையும் தேனையும் பச்சிளம் குழந்தைகளை தவிர அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்கு தேன் கலக்காமல் தண்ணீரில் லெமன் பிழிந்து கொடுக்கலாம்.
தேன் கலந்த எலுமிச்சை சாறோடு இஞ்சி சாறையும் சேர்த்து குடித்தால் குழந்தைகள் உட்பட அனைவரின் தொண்டை புண்களுக்கும் மிகவும் பலனளிக்கும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி சளியை வெளியேற்றுகிறது.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் சிகிச்சையின் பலனை வேகப்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |