'லியோ' படத்தை வெளியிட தடை... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் விஜயின் திரைப்படமான லியோ வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், இது வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக வருகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.
ஆனால் இசைவெளியீட்டு விழா முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக படக்குழுவினர் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இதையடுத்து திரைப்படத்தில் உள்ள `BADASS' பாடல் மற்றும் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
வெளியிடுவதில் தடை
ஐதராபாத் நீதிமன்றத்தில் சீதா ராமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி என்பவர் இந்த படத்தின் பெயர் 'லியோ' என்பதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு பதிவுசெய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின் பின் 'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ஆம் திகதி வரை திரையிட தடைவிதித்துள்ளது.
'லியோ' தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |