வெளியாகிய "லியோ" ட்ரைலர்... சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக வருகின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.
ஆனால் இசைவெளியீட்டு விழா முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக படக்குழுவினர் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இதையடுத்து திரைப்படத்தில் உள்ள `BADASS' பாடலின் புரோமா வீடியோவும் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் "லியோ" படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருகின்றது.
லியோ ட்ரைலர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |