மனைவியை கொன்ற வழக்கில் தூக்கிலிடப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் லெஸ்ஸி ஹில்டன். ஜமைக்காவைச் சேர்ந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இடம்பிடித்திருந்தார்.
லெஸ்லி ஹில்டன் 1935 முதல் 1939 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 1935 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
6 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 12 இன்னிங்ஸில் மொத்தம் 16 விக்கெட்டுகளை எடுத்தார். 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்துவீச்சாகும். லெஸ்லி ஹில்டன், ரோஸ் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
12 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற அவர்களின் திருமண வாழ்க்கை திடீரென தடம் மாறியது. மனைவி ரோஸ் நியூயார்க்கைச் சேர்ந்த பிரான்சிஸ் ப்ரூக் என்பவருக்கும் இடையே தவறான உறவு மலர்ந்தது.
இதனைக் கேள்விப்பட்டு கோபத்தின் உச்சத்துக்கு சென்ற லெஸ்ஸி, மனைவி ரோஸை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். சுமார் 7 குண்டுகள் ரோஸின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் லெஸ்லி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் தூக்கிலிடப்பட்டார்.