இலங்கையில் பற்றி எரியும் பிரச்சனைகளை தீர்க்க கைகோர்ப்போம்...! பிரதமர் ரணில் கடிதம்
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
முன்னதாக, புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித ஆதரவும் அளிக்கமாட்டோம் என சமகி ஜன பலவேகயா கட்சி அறிவித்தது.
இந்நிலையில், கட்சி அரசியலை கைவிட்டுவிட்டு, நாட்டில் பற்றி எரியும் பிரச்சனைகளை தீர்கக் புதிய அரசாங்கத்துடன் சமகி ஜன பலவேகயா கட்சி கைகோர்க்க வேண்டும் என கடிதத்தின் வாயிலாக சஜித்துக்கு ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலைமை இன்னும் மோசமாகும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேட்டி
மக்கள் எதிர்கொள்ளும் பற்றி எரியும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க மற்றும் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் ஸ்திரப்படுத்த தங்களால் முன்னெடுக்கப்படும் கூட்டு முயற்சிக்கு சமகி ஜன பலவேகயா ஆதரவளிக்க வேண்டும்.
நாளுக்கு நாள் நாட்டின் எதிர்கலாம் மோசமான நிலைமையை எதிர்கொள்ளும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நேர்மறையான மற்றும் விரைவான பதிலை எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.