"நான் சுயநினைவுடன் எழுதுவது".,இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்! சிக்கிய கடிதம்
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்
கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெமலா மேரியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், பொலிஸாருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜெமலாவின் உடலை வாங்கிக் கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இறப்பதற்கு முன் எழுதிய கடிதம்
இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஜெமலா மேரியின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஜெமலா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், "நான் சுய நினைவுடன் எழுவது; என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது. என்னை யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டவில்லை" என எழுதப்பட்டிருந்தது.
இது மட்டுமின்றி அப்பெண்ணின் உள்ளாடையிலும் அதே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |