என் உயிருக்கு ஆபத்து உள்ளது! வீடியோ வெளியிட்ட பின் மாயமான விளையாட்டு நட்சத்திரம்..மூன்று மாதங்களாக நீடிக்கும் மர்மம்
ஸ்பெயினில் மாயமான பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர் வெளியிட்ட வீடியோ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரக்பி நட்சத்திரம்
பர்மிங்காமைச் சேர்ந்த ரக்பி மற்றும் எக்ஸ் ஃபேக்டர் நட்சத்திரமான லெவி டேவிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அவர் காணாமல் போவதற்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
@Getty
அதில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடியோ விரைவில் நீக்கப்பட்டது. அதனால் லெவியைத் தவிர வேறு யாரோ அவரது கணக்குகளை அணுகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
தனியார் புலனாய்வாளரின் குற்றச்சாட்டு
இந்த நிலையில் தற்போது அவர் காணாமல் போன மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது இருப்பிடம் இன்னும் தெரியவில்லை.
தனியார் புலனாய்வாளர் கவின் பர்ரோஸின் மூலம் பெறப்பட்ட கறுப்பு மற்றும் வெள்ளை வீடியோவில், டேவிஸ் நேராக கமெராவை உற்றுப் பார்த்து பேசுகிறார்.
அதில், 'ஹலோ, என் பெயர் லெவி டேவிஸ், என் உயிருக்கு ஆபத்து உள்ளது... நான் சொல்வதைக் கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறுகிறார். மேலும், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னை மிரட்டுபவர்கள் குறித்து டேவிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகவும், ஆனால் அதிகாரிகள் அவருக்கு உதவ மறுத்துவிட்டதாகவும் கவின் பர்ரோஸின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம், லண்டனில் உள்ள சோமாலிய மாஃபியாவிடம் டேவிஸ் கணிசமான கடன்களை அடைத்துவிட்டதாக Catalan செய்தித்தாளான La Vanguardia கூறியது.
நீடிக்கும் மர்மம்
இதற்கிடையில் டேவிஸ் பார்சிலோனா துறைமுகத்தில் மூழ்கியிருக்கலாம் என பொலிஸார் யூகித்தனர். ஆனால் அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை.
கடைசியாக அவர் காணாமல் போன நாளில், மதுக்கடையை விட்டு வெளியேறுவது பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. லெவி டேவிஸ் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆவதால் இன்னும் அவரது விடயத்தில் மர்மம் நீடிக்கிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.