முதல் டெஸ்டிலேயே 61 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! மிரட்டிய 19 வயது வீரர்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரரான லுஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சாதனை அரைசதம் விளாசினார்.
விக்கெட் சரிவு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி டோனி டி ஸோர்சி, ப்ரீட்ஸ்கி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சிவங்காவின் அபார பந்துவீச்சில் டோனி டக்அவுட் ஆக, ப்ரீட்ஸ்கி 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முல்டர் 17 ஓட்டங்களில் ரன்அவுட் ஆக, பெடிங்கம் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார்.
தங்கள் முதல் டெஸ்டில் களமிறங்கிய லுஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் டெவல்ட் பிரேவியஸ் கைகோர்த்தனர்.
61 ஆண்டுகால சாதனை
இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த லுஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் முன்னாள் வீரர் கிரேம் பொல்லாக்கின் சாதனையை முறியடித்தார். அதாவது, 1964ஆம் ஆண்டு பொல்லாக் தனது 19 வயது 317 நாட்களில் அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசியிருந்தார்.
ஆனால், லுஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 19 வயது 93 நாட்களில் அரைசதம் அடித்து, டெஸ்ட் வரலாற்றில் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த இளம் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை படைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |