2929 நாட்களுக்கு பின் விக்கெட்! ஜெய்ஸ்வாலை வெளியேற்றிய வீரருக்கு குவிந்த ஆதரவு
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரர் லியாம் டாஸன் 8 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் வீழ்த்தினார்.
லியாம் டாஸன்
ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் ஆல்ரவுண்டர் வீரர் லியாம் டாஸன் (Liam Dawson) 8 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணிக்காக பந்துவீசினார்.
அரைசதம் விளாசி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (Yashasvi Jaiswal) 58 (107) ஓட்டங்களில் லியாம் டாஸன் வெளியேற்றினார்.
இது அவரது 8வது டெஸ்ட் விக்கெட் ஆகும்.
2929 நாட்கள்
அவரது 7வது விக்கெட்டுக்கும் 8வது விக்கெட்டுக்குமான இடைவெளி 2929 நாட்கள் ஆகும். நேற்றைய தினம் அவர் 15 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் இங்கு சிறப்பாக எதுவும் செய்யவில்லை" என்றார். மேலும், "நான் இருக்கும் வயதில், டெஸ்ட் கிரிக்கெட் போய்விட்டது என்று நினைத்தேன் என்று நான் சிலரிடம் கூறினேன்" என தெரிவித்தார்.
27 வயதில் இருந்து கடைசியாக டெஸ்ட் போட்டியை விளையாடிய டாஸன், 35வது வயதில்தான் மீண்டும் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பதால் மைதானத்தில் ரசிகர்களிடையே அவருக்கு ஆதரவு பலமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |