போர் தொடர்பில் இராணுவம் குறித்து தவறான தகவல்கள்: கட்சியின் துணைத் தலைவர் கைது
ரஷ்யாவில் லிபரல் யப்லோகோ கட்சியின் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவறான தகவல்
உக்ரைனில் உள்ள பொதுமக்களுக்கு எதிரான ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த "தவறான தகவல்" என்று அழைக்கப்படுவதைப் பகிர்ந்து கொண்டதாக, லிபரல் யப்லோகோ கட்சியின் துணைத் தலைவர் மாக்ஸிம் க்ருக்ளோவ் (Maxim Kruglov) குற்றம்சாட்டப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது உக்ரைனில் நடந்த போருக்கு எதிராக பேசியதற்காக, சிறையில் அடைக்கப்பட்டவர்களின் நீண்ட பட்டியலில் மாக்ஸிமும் இணைகிறார்.
அதாவது, இராணுவத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய குற்றவியல் குற்றச்சாட்டில் மாக்ஸிம் க்ருக்ளோவை ரஷ்ய புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |