துயரில் முடிந்த ஐரோப்பா கனவு! மத்திய தரைக்கடலில் 60 புகலிடக் கோரிக்கையாளர் மரணம்?
லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மத்தியதரைக் கடல் வழியாக பயணம் செய்த 60க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் சோகம்
லிபியாவிலிருந்து(Libya) இத்தாலி(Italy) அல்லது மால்டா(Malta) நோக்கி கப்பலில் பயணம் செய்த குறைந்தது 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் ஒரு தன்னார்வக் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு முன்பு Zawiya, Libya என்ற இடத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் இயக்கம் மூன்று நாள்களில் செயலிழந்து விட்டதாகவும், சில நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தத்தளித்ததாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த SOS Mediterranee என்ற தன்னார்வக் குழுவினால் மீட்கப்பட்ட உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தங்களுடன் பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் தன்னார்வக் குழுவினால் மீட்கப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்குவதாக SOS Mediterranee தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் SOS Mediterranee குழுவால் மீட்கப்பட்ட 25 பேர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர், அவற்றுள் இருவர் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் சிசிலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மரக் கப்பலில் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 113 பேரையும், ரப்பர் டிங்கியில்(rubber dingy) இருந்து 88 பேரையும் மீட்டு இருப்பதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடரும் உயிரிழப்பு
சிறந்த வாழ்க்கைத் தேடி மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் எதிர்நோக்கும் ஆபத்துகளை இந்த துயரம் எடுத்துக்காட்டுகிறது.
மத்தியதரைக் கடல் பாதை உலகின் மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிலேயே இந்த வழித்தடத்தில் கிட்டத்தட்ட 2,500 புகலிடக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக அனைத்துலக குடிபெயர்வு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிலும் இந்த நிலைமை தொடர்ந்துள்ளது, இந்த ஆண்டு மத்தியதரைக் கடல் பாதையில் 220 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக IOM தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mediterranean Sea migrant crisis," "migrant boat capsized," "dangers of crossing Mediterranean”, "migrant boat tragedy Libya," "Central Mediterranean migrant deaths," "SOS Mediterranee rescue"