விமான விபத்தில் உயிரிழந்த லிபிய இராணுவ உயர் அதிகாரிகள் - வெளியான சிசிடிவி காட்சிகள்
லிபிய இராணுவ உயர் அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
லிபிய இராணுவத்தின் தலைமை அதிகாரி மொஹம்மது அலி அஹ்மத் அல்-ஹத்தாத், துருக்கியின் தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த 4 உயர்பதவி லிபிய அதிகாரிகள் மற்றும் 3 குழுவினரும் உயிரிழந்தனர்.
விபத்து விவரம்
அல்-ஹத்தாத் பயணித்த Dassault Falcon 50 வகை தனியார் ஜெட், அங்காரா எசென்போகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை இழந்தது.
விமானம் மின்சார கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் கோரியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தரையிறக்கும் முன், ஹெய்மானா (Haymana) மாவட்டத்தில் உள்ள Kesikkavak கிராமம் அருகே விமானம் வெடித்து சிதறியது.

கமெரா காட்சிகள்
உள்ளூர் தொலைகாட்சி நிலையங்களில் ஒளிபரப்பப்பட்ட பாதுகாப்பு கமெரா காட்சிகளில், ஹெய்மானா பகுதியில் இரவு வானத்தில் திடீரென வெடிப்புடன் ஒளிரும் காட்சி பதிவாகியுள்ளது.
BREAKING: First footage of Libyan Army Chief of General Staff Muhammed Ali Al-Haddad’s plane crashing in Haymana, Türkiye after taking off from Anakara’s Esenboğa Airport pic.twitter.com/m8kk1r8w1s
— Rapid Report (@RapidReport2025) December 23, 2025
Search-and-rescue teams have reportedly reached the crash site of the private jet carrying Libya’s Chief of General Staff, General Muhammad Ali Ahmad al-Haddad, near the Turkish capital of Ankara. pic.twitter.com/6atSweMLzb
— OSINTdefender (@sentdefender) December 23, 2025
உயிரிழந்த முக்கிய அதிகாரிகள்
ஜெனரல் அல்-பிடோரி கரிபில் - லிபிய தரைப்படைத் தலைவர்
பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் அல்-கட்டாவி - இராணுவ உற்பத்தி ஆணையத் தலைவர்
முஹம்மது அல்-அசாவி தியாப் - தலைமை அதிகாரியின் ஆலோசகர்
முஹம்மது ஓமர் அஹ்மத் மஹ்ஜூப் - இராணுவ புகைப்படக் கலைஞர்
Haymana yakınlarında düşen uçağın enkazına çevredeki köylerden yardıma koşanlar ulaşmış. #Ankara #Libya #Haymana pic.twitter.com/Zv99hrweCx
— muhaliffrida (@muhaliffrida) December 23, 2025
அரசியல் மற்றும் இராணுவ தாக்கம்
லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் திபெய்பா, “இது நாட்டிற்கும் இராணுவத்திற்கும் மிகப்பெரிய இழப்பு” எனக் கூறி, 3 நாள் தேசிய துக்க அனுசரிப்பை அறிவித்துள்ளார்.
அல்-ஹத்தாத், 2011-இல் கத்தாபி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றவர். 2020 முதல் மேற்கு லிபியாவின் முக்கிய இராணுவத் தலைவராக இருந்தார்.
அவர், சக்திவாய்ந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ஒற்றுமை மற்றும் சமரசம் பேசும் தலைவராக மதிக்கப்பட்டார்.
கிழக்கு லிபியத் தலைவர் கலீஃபா ஹப்தார் கூட ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து, லிபியாவின் ஒற்றுமை முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவு எனக் கருதப்படுகிறது. துருக்கி மற்றும் லிபியா இணைந்து விசாரணை நடத்த உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Libyan Army Chief Mohammed al-Haddad plane crash, plane crash near Ankara, Dassault Falcon 50 jet crash, Turkiye capital, Libya declares three days national mourning al-Haddad death, Abdul Hamid Dbeibah statement tragic accident Tripoli GNU, Turkish Interior Minister Ali Yerlikaya emergency landing report, Electrical fault suspected cause Libyan jet crash Ankara, Libya-Turkiye defence talks military cooperation delegation killed