LIC Saral Pension: ஒருமுறை மட்டுமே முதலீடு.., மாதம் ரூ.12,000 பெறலாம்
LIC Saral Pension திட்டத்தின் கீழ் பாலிசி வாங்கியவுடன் இருந்தே உங்களது ஓய்வூதியத்தை பெற தொடங்கலாம்.
LIC Saral Pension திட்டம்
இந்தியாவின் மிக பெரிய அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation நிறுவனமானது வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு பாலிசிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பென்ஷன் பெறும் திட்டங்கள் உள்ளன.
பெரும்பாலான பென்ஷன் திட்டங்கள் 60 வயதில் தான் தொடங்கும். ஆனால், எல்.ஐ.சி -யின் சாரல் பென்ஷன் யோஜனா பிளான் (Saral Pension Yojana) மூலம் 40 வயதில் இருந்தே இந்த வாய்ப்பை பெற முடியும்.
இந்த பிளானானது உடனடி annuity பிளான் ஆகும். இந்த பாலிசியை எடுத்தவுடன் இருந்தே நீங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும்.
இதில், நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்த வேண்டும். அதன் பின்னர் இருந்து தான் ஓய்வூதிய தொகையை பெறுவீர்கள்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்
LIC Saral Pension திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000 பெறலாம், அதிகபட்ச ஓய்வூதியத்திற்கு வரம்பு இல்லை. நீங்கள் பெறும் ஓய்வூதியமானது முதலீடு தொகையை பொருத்தது.
மாத ஓய்வூதியம் பெறுவதற்கு பதிலாக காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர பென்ஷனாகவும் பெறலாம்.
முக்கிய அம்சங்கள்
* இந்த பாலிசியில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது 40, அதிகபட்ச வயது 80.
* பாலிசி வாங்கிய உடனேயே ஓய்வூதியத்தை பெற முடியும்.
* பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.
* நீங்கள் பாலிசியை சரண்டர் செய்ய நினைத்தால், பாலிசி தொடங்கிய 6 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்ய முடியும்.
Single or Joint Account
* Single பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு இந்த திட்டத்தின் கீழ் பென்ஷன் கிடைக்கும். ஒருவேளை அவர் உயிரிழந்துவிட்டால், அவர் குறிப்பிட்ட நாமினிக்கு பாலிசி தொகை கிடைக்கும்.
* Joint Account என்பது தம்பதிகளுக்கு ஏற்ற திட்டமாகும். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
கணவர் இறந்த பிறகு மனைவிக்கு அந்த தொகை கிடைக்கும். இருவரும் உயிரிழந்து விட்டால் நாமினிக்கு டெபாசிட் தொகை கிடைக்கும்.
மாதம் ரூ.12,000
இந்த எல்ஐசி பாலிசி எடுக்கும் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ.1,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். 42 வயதான ஒருவர் இந்த பாலிசியின் கீழ் ரூ.30 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ.12,388 ஓய்வூதியம் பெறலாம்.
குறிப்பாக, சாரல் பென்ஷன் யோஜனாவின் கீழ் பாலிசி எடுத்த 6 மாதங்களுக்கு பிறகு கடன் பெற முடியும். இந்த பாலிசியை ஆன்லைனில் வாங்க, எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in -க்கு சென்று பார்வையிடுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |