ராஜ குடும்பத்தில் இன்று ஒரு திருமணம்: அரியணையேற தடை விதிக்கப்பட்ட அந்த இளவரசி யார்?
ராஜ குடும்பம் ஒன்றில், இன்று, இன்னும் சில மணி நேரத்தில் இளவரசி ஒருவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
அந்த இளவரசி யார்?
Liechtenstein நாட்டை ஆளும் இளவரசர் Alois மற்றும் இளவரசி Sophie தம்பதியரின் மகளான இளவரசி Marie Caroline (28) என்பவருக்குதான் இன்று திருமணம் நடைபெற உள்ளது.
தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் இளவரசி Marie, Leopoldo Maduro Vollmer என்பவரைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இளவரசி Marie, பாரீஸ் ஆடை வடிவமைப்பு பள்ளியில் படித்ததுடன், நியூயார்க்கில் அதே துறையில் பட்டம் பெற்றவரும் ஆவார்.
அரியணையேற தடை
ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இளவரசி Marie ஆளும் பட்டத்து இளவரசர் தம்பதியருக்குப் பிறந்தாலும், அவர் நாட்டை ஆளமுடியாது.
அத்துடன், அரியணையேறும் வரிசையில் அவரது தம்பிகள் பெயர் வரும் நிலையிலும், இளவரசி Marie பெயர் மட்டும் வராது.
அதற்குக் காரணம், Liechtenstein நாட்டில், Agnatic primogeniture என்னும் விதி பின்பற்றப்படுகிறது. அதாவது, அந்த நாட்டில் ஆண்கள் மட்டும்தான் அரியணையேற முடியும்.
ஆகவே, இளவரசி Marie பட்டத்து இளவரசர் தம்பதியருக்குப் பிறந்தாலும், அவர் நாட்டை ஆளமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |