தமிழகத்தை உலுக்கிய வழக்கு: 2 பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் காதலனுக்காக தனது 2 பிள்ளைகளை கொலை செய்த அபிராமிக்கு, மாவட்ட நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு
கடந்த 2018ஆம் ஆண்டில் காஞ்சிபுர மாவட்டம் மூன்றாம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண், தனது இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக்டொக்கில் பிரபலமான அபிராமி, பிரியாணி கடையில் வேலைபார்த்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.
இந்த விடயம் அவரது கணவர் விஜய்க்கு தெரிய வரவே, அவரையும் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
சாகும்வரை ஆயுள்
விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைக்க, 2 பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மீனாட்சி சுந்தரம், அபிராமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரமும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |