வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்! மீண்டும் பாஸ்பைன் இருப்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
பூமிக்கு வெளியே வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபிக்கும் எந்தவொரு கண்டுபிடிப்பும் மனிதகுலத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டுகிறது. இது மனித குலத்தின் முடிவில்லாத தேடலாகும்.
அப்படி ஒரு தேடலுக்கு கிடைத்த பலனாக, இப்போது பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் இருப்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முதன்முதலில் வெள்ளியின் மேகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்
வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவால் 2020 செப்டம்பரில் வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவை வெள்ளியின் மேகங்களில் இருந்தன.
[NASA
விஞ்ஞானி ஜேன் க்ரீவ்ஸ் (Professor Jane Greaves) தலைமையிலான குழு இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது. இதனால் காரசாரமான விவாதங்கள் தொடங்கின. ஆனால் கிரகத்தின் அருகில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாஸ்பைன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மீண்டும் வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு
ஆனால் இந்த வாரம் கார்டிப்பில் நடந்த ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின் தேசிய வானியல் மாநாட்டில் பேசிய க்ரீவ்ஸ், முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட வீனஸின் வளிமண்டலத்தில் ஆழமாக பாஸ்பைன் கண்டறியப்பட்டதை வெளிப்படுத்தினார்.
ஹவாயில் உள்ள மௌனா கியா ஆய்வகத்தில் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கியை (JCMT) பயன்படுத்தி க்ரீவ்ஸ் மற்றும் சகாக்கள் வீனஸின் வளிமண்டலத்தை கவனித்தபோது பாஸ்பைன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பு, பாஸ்பைன் வீனஸின் கீழ் வளிமண்டலத்தில் இருந்து வருகிறது என்று கூறுகிறது.
Getty Images/Science Photo Library RF
பாஸ்பைன் உயிரின் குறிகாட்டி
மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜனைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழும் நுண்ணுயிரிகளால் பூமியில் பாஸ்பைன் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை பூமியில் வேறு எந்த வகையிலும் உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே பாஸ்பைன் உயிரின் குறிகாட்டி என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Image: European Southern Observatory
வெள்ளி கிரகத்தில் உயிர்கள்!
வெள்ளியின் மேற்பரப்பு 475 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் வாழத் தகுதியற்றது. ஆனால் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் உயரத்தில் அது பூமியைப் போலவே வெப்பமாக இருக்கிறது. இங்கு உயிர் வாழ வாய்ப்பு உள்ளதா என்பது ஆய்வாளர்களின் ஆய்வு.
ஆனால் சில விஞ்ஞானிகள் பாஸ்பைன் சில கனிம செயல்முறைகள் மூலமாகவும் உருவாகலாம் என்று நம்புகிறார்கள். எனவே, பாஸ்பைன் இருப்பதால், வீனஸில் உயிர்கள் இருப்பதை முடிவு செய்ய முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
Image: European Southern Observatory
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |