நிலவில் கூட உயிர் இருக்கலாம்! நம்பும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு
நிலவில் கூட உயிர்கள் இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானி நம்புகிறார்.
நிலவில் உயிர்கள்
NASA-வின் Goddard விண்வெளி மையத்தின் கிரக ஆராய்ச்சியாளரான பிரபால் சக்சேனா (Prabal Saxena), சில நுண்ணுயிரிகள் நிலவு போன்ற கடுமையான சூழல்களிலும் வாழ முடியும் என்று தெரிவிக்கிறார். இது அடுத்த சந்திர பயணத்திலேயே கண்டுபிடிக்கப்படலாம் என்று கூறுகிறார்.
காற்று இல்லாத கிரகங்கள் கூட சில இடங்களில் வாழக்கூடிய இடங்களைக் கொண்டிருக்கலாம் என்று பிரபால் கருதுகிறார். இதையெல்லாம் ஆய்வு செய்யும் நோக்கில் நாசா 2025-ல் Artemis 3 moon mission-ஐ நடத்தவுள்ளது.
Getty Images
சந்திரனில் இருட்டாக இருக்கும் இடங்கள்
சந்திரனில் சில இடங்கள் எப்போதும் இருட்டாகவே இருக்கும். அதனால் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு அங்கு செல்ல முடியாது. தீவிர நுண்ணுயிரிகள் என வகைப்படுத்தப்பட்ட நுண்ணுயிரிகளுக்கு இத்தகைய இடங்கள் பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் என்று பிரபால் மற்றும் இணை ஆராய்ச்சியாளர்கள் அனுமானிக்கின்றனர்.
நிலவில் நுண்ணுயிரிகள் இருந்தால், அவை பூமியில் இருந்து முந்தைய சந்திர பயணங்களில் பயன்படுத்தப்பட்ட சந்திர லேண்டர்களில் வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
NASA
பூமிக்கு அருகில் உள்ள கிரகத்தில் உயிரினம்
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே வேற்று கிரக உயிர்கள் இருப்பதை முதலில் ஆய்வு செய்தவர்களில் பிரபலும் ஒருவர். இருப்பினும், சமீபத்தில், பூமிக்கு அருகில் உள்ள எந்த கிரகத்திலும் உயிர்கள் இருக்க முடியுமா என்று ஆராய்ச்சி திரும்பியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், சந்திரனைப் போன்ற மேற்பரப்பில் நுண்ணுயிரிகள் வாழ முடியும் என்ற ஆச்சரியமான கண்டுபிடிப்புக்கு தானும் அவரது சகாக்களும் வந்துள்ளனர் என்று பிரபால் கூறினார்.
NASA