வேற்றுகிரத்தில் உயிர் இருப்பது உண்மை... 99 சதவீதம் உறுதி செய்த விஞ்ஞானிகள்
நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள மற்ற கிரகங்களில் உயிர் இருப்பதற்கான மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு ரசாயனங்கள்
124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு தொலைதூர கிரகத்தில் உயிர்கள் இருப்பதாக அவர்கள் தற்போது 99.7 சதவீதம் உறுதியாக நம்புகிறார்கள். 124 ஒளி ஆண்டுகள் தொலைவு என்பது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட மூன்று பில்லியன் மடங்கு அதிகம்.
அந்த கிரகமானது உயிர் வாழக்கூடிய மண்டலத்திற்குள் உள்ளது என்றும், அதன் மேற்பரப்பில் திரவ நீரைத் தாங்கலாம் என்றும் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ரசாயனங்கள் பொதுவாக பூமியில் மட்டுமே உருவாக்கப்படும், மட்டுமின்றி முக்கியமாக சிறிய நுண்ணிய கடல் பாசிகளால் ஆனது என்றும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர்கள் உயிர்வாழக்கூடும் என்பதற்கான வலுவான ஆதாரத்தை இந்த முன்னேற்றம் வழங்குகிறது. இது வரும் ஆண்டுகளில் அறிவியலை மாற்றக்கூடிய ஒரு மகத்தான கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுவே முதல் முறை
கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தின் பேராசிரியர் நிக்கு மதுசூதன் தெரிவிக்கையில், இது ஒரு திருப்புமுனையாக இருக்கலாம், திடீரென்று நாம் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா என்ற அடிப்படைக் கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்துள்ளது என்றார்.
K2-18b என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருப்பது முன்னர் கண்டறியப்பட்டது.
மேலும் ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் வாழக்கூடிய மண்டலத்தில் கார்பன் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் தற்போது வேற்றுகிரவாசிகள் தொடர்பான் கூற்றும் உண்மை என்றே உறுதியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |